Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

1,550 மில்லியன் ரூபா வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (08) பயனாளிகளின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நலன்புரி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஜூலை மாதம் 790,000 பயனாளிகளுக்கு பணம் செலுத்தப்பட்டது.

இதன்படி ஜூலை மாதத்தில் பயனடைந்த மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை1,048,170 என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கணக்குகளை சரிபார்த்த பின்னர், ஏனைய பயனாளிகளுக்கு பணம் செலுத்த நலன்புரி சபை ஆயத்தமாகி வரும் நிலையில், ஜூலை மாத கொடுப்பனவு இவ்வாறு  செலுத்திய பின்னர், அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவை செலுத்த வாய்ப்புள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button