Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

பாண் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின், கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977க்கு தெரிவிக்க முடியும் என கோரப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button