Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அணி பிரமாண்ட வெற்றி!

இருபதுக்கு இருபது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி பங்களாதேஷ் மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

கேப்டவுனில் நேற்று (12) உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் மகளிர் அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக Sobhana Mostary 29 ஓட்டங்களையும் அணித்தலைவர் Nigar Sultana 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ஓஷதி ரணசிங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி 127 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி 18 ஓவர்கள் 2 பந்துகள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணி சார்பாக ஹர்ஷித சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button