Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கும் அபாயம்

தனியார் பேருந்து சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பஸ் கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்று(01)அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை, கட்டாயமாக இரண்டு வாரங்களுக்குள் கட்டணங்கள் உயர்த்தப்படுமென தெரிவித்த அவர், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 35 ரூபாயாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தற்போதைக்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button