Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது மேலும் தாமதமாகலாம் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டிசம்பர் முதலாம் திகதி கூடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1ஆம் திகதி முதல் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடுப்போம்.

அதற்கான வர்த்தமானியை நடைமுறைபடுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்துள்ளோம். ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் இதனை 7- 8 வருடங்களாக இழுத்தடிப்பு செய்தன.

கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், அதை நாங்கள் இழுத்தடிக்க போவதில்லை. ஜனவரி 1 முதல் இதை நடைமுறைப்படுத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button