News
10 ஆயிரம் ரூபா நிவாரணம்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்டு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 10,000 ரூபாய் நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.




