Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

பேருந்துகள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரி பாகங்களை அகற்றுவதற்கு இரண்டு வார கால அவகாசம் காவல்துறை போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் தமது வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை அகற்றுமாறு காவல்துறை போக்குவரத்து பிரிவினர் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர் உதிரி பாகங்கள் பொருத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சத்தம் எழுப்பும் ஹார்ன்கள், இரும்பு கம்பிகள், தேவையற்ற மின்விளக்குகள், அலங்காரங்கள் என அனைத்து தேவையற்ற கூறுகளும் அகற்றப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இந்த தேவையற்ற உதிரி பாகங்கள் பொதுவாக தனியார் பேருந்துகளிலும் முச்சக்கரவண்டிகளிலும் காணப்படுவதாக தெரிவித்த பிரதி காவல்துறை மா அதிபர், இந்த உதிரி பாகங்களினால் பொதுமக்கள் அவதியுறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 17 ஆம் திகதி பிறகு, நிறுவப்பட்ட இந்த உதிரி பாகங்களை சட்டத்தின் வரிசையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடங்கப்படும் என்றும் பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button