Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஒரு குடும்பத்தின் மாத செலவு 63,912 ரூபாய்: புள்ளியியல் திணைக்களம்

2023 ஆம் ஆண்டின் ஜூலை மாத புள்ளிவிவரத்தின்படி , நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு 63,912 ரூபாய் என கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணையை வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அத்தோடு மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணையில், இலங்கையில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு 15,978 ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தொகை ஜூன் மாதம் 16,089 ரூபாயாக காணப்பட்டதாகவும் தற்போது அந்த செலவு சிறிதளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒருவருக்கு 17,233 ரூபாய் தேவைப்படுவதுடன், ஜூன் 2023 இல் இந்த தொகை 17,352 ரூபாயாக காணப்பட்டுள்ளது.

அதேவேளை, மொனராகலை மாவட்டத்தில் ஒருவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தளவு பெறுமதி பதிவாகியுள்ளதுடன், அதன் பெறுமதி 15,278 ரூபா எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜூன் மாதம் இந்த பெறுமதி 15,383 ரூபாயாக காணப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button