Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

மின்சார கட்டணத்தில் திருத்தம் : வெளியான விசேட அறிவிப்பு

மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தில் திருத்தங்கள் செய்வது தொடர்பில் பொது மக்களிடம் எழுத்து மூலமாக கருத்துக்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி வரையில் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொது மக்களிடம் கருத்து கோரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ள யோசனைகள் அண்மையில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த முன்மொழிவுகளில் மின்சார கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் மின்சார கட்டணத்தை எவ்வளவு தொகையால் குறைப்பது என்பது குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த சில காலங்களாக மின்சார கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button