Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) நடவடிக்கை எடுத்தது.

இதற்கமைய, இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார கட்டண திருத்தத்தின்படி, வீட்டுப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தால் குறைவடையும் நிலையில்  மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் 21 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

உணவகங்களுக்கு 31 சதவீதமும் மற்றும் தொழில்துறைக்கு 30 சதவீதமும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்கள் 12% குறைக்கப்பட்டுள்ளன.

அரசு நிறுவனங்களுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தாலும் மற்றும் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தால் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button