Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கடவுச்சீட்டு அவசரமாக தேவைப்படுபவர்கள் மாத்திரம் தற்போது விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை கடவுச்சீட்டு அவசரமாக தேவைப்படாதவர்களை ஒக்டோபர் வரை காத்திருக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒக்டோபர் மாதத்திலேயே சர்வதேச தராதரத்துடனான கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் நியமங்களை பூர்த்தி செய்யும் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒக்டோபர் மாத இறுதியிலேயே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த கடவுச்சீட்டுகள் உலகளாவிய கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கையின் நிலைமையை மேம்படுத்த உதவும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய கடவுச்சீட்டில் உரிமையாளரின் அனைத்து விடயங்களையும் சேமித்துவைக்கும் மைக்ரோசிப் காணப்படும், இது உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் உரிமையாளர் குறித்த தகவல்களை பெறுவதை இலகுவாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கடவுச்சீட்டு காரணமாக இலங்கையர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நான் தனிப்பட்ட ரீதியில் அறிந்துகொண்டுள்ளேன் என கூறினார்.

எனவே விமான நிலையங்களில் சோதனைகள் இடம்பெறும் போது எங்கள் மக்கள் எதிர்காலங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button