Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக வெளியான தகவல்

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அவ்வகையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சட்ட விரோதமாக தொழிலுக்கு செல்ல முயற்சி செய்த இரண்டாயிரத்து 500 பேர் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம், குறித்த எண்ணிக்கை ஆயிரத்து 900 ஆக காணப்பட்டது.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுடன் தொடர்புடைய நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, அனுமதிப் பத்திரமின்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்பியமை தொடர்பிலும், தனிநபராக அல்லது குழுவாக வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பிலும் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் தனிநபர்களாக குழுக்காளாக செயற்பட்ட 90 பேரும் அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு முற்பட்ட 9 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரத்தை பெற்று தவறாக செயற்பட்ட நிறுவனமொன்றின் உரிமையாளரும் அதில் அடங்குகின்றனர்.” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button