Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

‘குறைந்த விலையில் எரிபொருள்“ : மக்களுக்கான அறிவித்தல்

குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து பொய்யானது என பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் தெரியவந்துள்ளது.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் 250 ரூபாவுக்கு எரிபொருள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

நேற்று (06) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட நிலையில், இந்தக் கருத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை தொடர்பில் முன்னாள் தலைவர் மேற்கொண்ட கணக்கீடுகளில் குறைபாடுகள் காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சூலானந்த விக்கிரமரத்ன கோப் குழு முன் தெரிவித்திருந்தார்.

அங்கு, இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்கவிடம் இது தொடர்பான அறிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து பொய்யானது என மக்களுக்கு அறிவிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button