Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஜனவரியில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

ஜனவரி மாதம் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் எரிபொருள் விலை நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ( Chrishantha Abeysena) தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் (1.12.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.

311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த விலைக்குறைப்பானது பொதுமக்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே விலை திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் எரிபொருள் விலை நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படும்.

விலைக் கட்டுப்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படும், வரிகள் எவ்வாறு குறைக்கப்படும் என்பது வரவு செலவுத் திட்டத்தில் நிரந்தரமாக தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button