Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

தங்கத்தின் விலையில் இன்று சடுதியாக பதிவான மாற்றம்!

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (20.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் மேலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அண்மையில் டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகிறது.

நேற்றைய தினம்  22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,000 ரூபாவாக காணப்படுகிறது.

ஏற்கனவே தங்க விலையானது 146,000 ரூபா வரையில் குறைந்த போது இன்னும் விலை குறைவை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான சூழலில் மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலைமையானது தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்டுகும் வகையில் அமைந்துள்ளதாக பொருளாதார அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button