Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஒரு இலட்சம் பேருக்கு கிட்டாது போன உயர்கல்வி வாய்ப்பு

பல்கலைக்கழக நுழைவுக்கான தகைமையை அடையும் மாணவர்களில் குறைந்தது ஒரு இலட்சம் வரையிலானவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையின் உயிர்கல்வி வாய்ப்பை பரவலாக்குவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழுக் கூட்டத்தின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அக் குழுவின் தலைவரும் நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருமான விஜேயதாச ராஜபக்சவினால இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நுழைவுக்காக ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 532 மாணவர்கள் தகைமையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்களில் 44 ஆயிரம் பேர் வரையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மிகுதி ஒரு இலட்சத்து 27 ஆயிரம் வரையிலான மாணவர்களில் 20,000 – 25,000 வரையிலானவர்கள் அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

சுமார் ஒரு இலட்சம் வரையிலானவர்களுக்கு பல்வேறு காரணங்களினால் உயர் கல்வி வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button