Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் – சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை

இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய் உள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டுவேலைத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் மேலம் அவர் தெரிவிக்கையில்,

“பதிவாளர் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய 2019 ஆம் ஆண்டில் 15,599 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர், 2020 இல், 37,649 புதிய நோயாளிகள் இணங்காணப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் நாங்கள் மிகப்பெரிய அதிகரிப்பைக் காண்கிறோம். ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் வாய் புற்று நோயே அதிகளவில் காணப்படுகிறது.

எனக்கு தெரிந்தவரை புகையிலை பயன்பாட்டை குறைக்க போதிய திட்டங்கள் இல்லை.

எனவே நம் நாட்டில் புகையிலைக்கு எதிராக அதிக வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button