Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்?

இலங்கை வழங்கியுள்ள கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று (27) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், மற்ற துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம் எனவும் கூறினார்.

மேலும், குறிப்பாக வரி அறவீடு முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகள் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்படி, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியம் இணங்கிய 2.9 பில்லியன் டொலர் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

எனினும் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதற்கான கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தூதுக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button