Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்

அரசின் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார மகிழுந்துகளை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், நாட்டுக்கு அனுப்பும் அன்னியச் செலாவணியின் அளவைப் பொறுத்து மின்சார மகிழுந்துகளை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு அமைச்சரவை முழுமையாக ஆதரவளித்தது. சிலர் இதில் ஹைபிரிட் மகிழுந்துகளை சேர்க்க அமைச்சர்கள் முன்மொழிந்தனர்.

மேலும் பெட்ரோல் மகிழுந்துகளை இறக்குமதி செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும்.எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி செல்ல வேண்டும்.

மின்னியல் வாகனங்களை நோக்கி செல்ல வேண்டும் என அரசின் சில முடிவுகளும் உள்ளன. அதனால் தான் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் காலங்களில் இந்த நாட்டிற்கு அரசாங்கம் என்ற வகையில் மின்னியல் வாகனங்களை மட்டுமே முடிவெடுப்போம்.

எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு இறக்குமதியாகும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்கும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button