Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் இடைநிறுத்தம்

நாகபட்டினத்துக்கும் (Nagapattinam) காங்கேசன்துறைக்கும் (Kangesanthurai) இடையிலான கப்பல் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டமையினால் 103 பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தானது திடீரென இடைநிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக கப்பலில் ஏறியிருந்த பயணிகள் கப்பலில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதுடன் பயணிகளுக்கு வழங்கப்படும் பயணசீட்டுக்களை வேறு திகதிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கப்பலுக்கு இதுவரை போதிய எரிபொருளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை எனவும் அந்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button