Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை – வெளியான அறிவிப்பு

சிவகங்கை கப்பல் சேவையானது யாழ். காங்கேசன்துறை (KKS) – நாகபட்டினம் இடையே சீராக சேவையில் ஈடுபடுவதாக கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான தடைகளும் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கப்பல் சேவையில் தடங்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரை தொடர்புகொண்டு வினவிய வேளை அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கப்பல் சேவையில் தடங்கல் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.

அத்துடன், பயணிகள் மிகவும் சௌகரியமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தை நீங்கள் பயணிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறுகிறது.

எனவே பயணிகள் www.Sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0212224647, 0117 642117 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ ஆசன பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button