Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

நியூசிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் – திணறும் இலங்கை அணி..!

போலோ ஒன் ஆனா இலங்கை அணி..! - வெற்றிக்காக போராடும் வீரர்கள் | Test Match Sl Vs Nz Tour Srilanka Score Match

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்து 164 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 4 ஆட்டமிழப்புகளை மாத்திரம் சந்தித்து 580 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் மூன்றாவது நாளான இன்று அனைத்து ஆட்டமிழப்புகளையும் சந்தித்து 164 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன அதிகபட்சமாக 89 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மெட் ஹென்ரி மற்றும் மிச்சல் பிரஷ்வெல் ஆகியோர் தலா மூன்று ஆட்டமிழப்புகளை கைப்பற்றினர்.

அதன்படி, 416 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நிலையில் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 116 ஓட்டங்களுக்கு 2 ஆட்டமிழப்புகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button