Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

எல்பிஎல் தொடரின் முதலாவது போட்டியில் கண்டி பல்கோன்ஸ் அணி அபார வெற்றி

லங்கா பிரீமியர் தொடரானது,(LPL) ஆரம்பமாகியுள்ள நிலையில் முதலாவது போட்டியில் கண்டி பல்கோன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் தொடரின் முதல் போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ்(Dambulla sixers) மற்றும் கண்டி பெல்கோன்ஸ் அணிகள்(kandy falcons )பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

கண்டி பல்கோன்ஸ் அணியின் அபாரமாக பந்துவீச்சின் மூலம், தம்புள்ள அணியின் முதல் 4 விக்கெட்டுகளை பவர் பிளேவுக்கு முன்னரே சரிந்தது.

எனினும், மார்க் செப்மன் மற்றும் இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்க ஆகியோரின் அபாரமான ஆட்டத்தின் மூலம் தம்புள்ள சிக்ஸர்ஸ் 179 ஓட்டங்களை குவித்தது.

அதிரடியாக ஓட்டங்களை குவித்த மார்க் செப்மன் 61 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், சமிந்து விக்ரமசிங்க 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் தசுன் ஷானக 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய கண்டி பல்கோன்ஸ் அணியின் வீரர் தினேஷ் சந்திமால் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்ததுடன் 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை பெற்றார்.

கமிந்து மெண்டிஸு27 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த பின்னர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தசுன் ஷானக ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

எனவே கண்டி பல்கோன்ஸ் அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 183 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button