Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

பாதுகாப்பு அமைச்சு சற்றுமுன் வௌியிட்ட அறிக்கை!

2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள்/ நிறுவனங்களின் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 01 ஒக்டோபர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

தேவையான விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் இணையதளமான www.defence.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரம்  புதுப்பித்தல் 31 டிசம்பர் 2023க்குப் பின் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளின்படி செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம்  இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
2024/2025 ஆம் ஆண்டிற்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் பதிவு புதுப்பித்தல் 01.10.2023 முதல் 31.12.2023 வரை மேற்கொள்ளப்படும். இக்காலக்கெடுவிற்குப் பின் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button