Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

எரிபொருள் விலை குறைப்பு: வெளியான முக்கிய அறிவித்தல்

எரிபொருள் விலை திருத்தம் வழமை போன்று இன்று நள்ளிரவில் இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Sri Lanka Petroleum Corporation) அறிவித்துள்ளது.

இன்று (31.7.2024) நள்ளிரவில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் விலை குறையும் என்ற கணிப்பின்படி, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்யாத காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகச் சந்தையில் WTI ரக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 1.43% குறைந்துள்ளது. தற்போது ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 77.16 டாலராக உள்ளது.

மேலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 81.13 டாலராக உள்ளது, இது 1.51% குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், மக்கள் உணரும் தாக்கத்துடன் எரிபொருள் விலை குறைக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button