Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை!

அரசாங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 2,000 ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.

5 ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக 30 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் 22 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு 5 வருட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டிருந்தது.

அதன்படி, கடந்த 1 ஆம் திகதி வரை உள்நாட்டு விடுமுறைக்கான 150 விண்ணப்பங்களும், வெளிநாட்டு விடுமுறைக்கான 1,000 விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கலாம் என அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல அரச ஊழியர்கள் கொரியாவுக்குச் செல்வதற்காக வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்கின்றனர் மற்றும் பெரும்பாலான விண்ணப்பங்கள் மொழிப் பிரச்சினை காரணமாக நிராகரிக்கப்படுகின்றன.

எனினும், மொழியைக் கற்றுக்கொண்ட பிறகு மீண்டும் விண்ணப்பிப்பார்கள், அதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும், அதன்படி, வெளிநாட்டு விடுப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button