Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

அரசாங்க அச்சக ஊழியர்களின் கொடுப்பனவுகளை திறைசேரி வழங்கவில்லை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

அரச அச்சக ஊழியர்களின் கொடுப்பனவுக்கான நான்கு கோடி ரூபாவை திறைசேரி இதுவரை செலுத்தவில்லை எனவும் அதனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர் திறைசேரியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களுக்காக அரசாங்க அச்சகம் இதுவரை 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.

இதேவேளை, நிதிப் பிரச்சினை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை அரசாங்க அச்சகம் முற்றாக நிறுத்தியுள்ளது.

எனவே வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு பணத்தை வழங்க முடியாது என திறைசேரி அண்மையில் அரசாங்க அச்சகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button