Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

அமைச்சரவை விரிவாக்கம்: மொட்டுக் கட்சியை புறக்கணிப்பு!

அமைச்சரவையை மேலும் விரிவாக்குவதில்லை என்பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின், எஸ் பி திசாநாயக்க போன்றவர்களை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அதிபர் தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான வழிகளை ஆராயுமாறு திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களின் பார்வையில், அமைச்சரவை விரிவாக்க நடவடிக்கையானது அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என அதிபர் தரப்பு கருதுவதாக கூறப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் நடக்குமானால், மக்கள் செல்வாக்கை இழக்க நேரிடும் என அதிபருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில், 22 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை காணப்படுகிறது, ஆனால் 30 பேர் கொண்ட அமைச்சரவையை அதிபர் நியமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button