Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

மாவட்ட, பிரதேச செயலாளர்களிடம் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கை!

அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதியை உரிய முறையில் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து பிரதேச செயலாளர்களிடமும் அதிபர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் நேற்று(15)இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டமானது “வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை 2024” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது ரணில் கருத்து தெரிவிக்கையில், “நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர் இந்த ஆண்டு மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்ட எதிர்பார்க்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21 தாக்குதலினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டதுடன் அதன் பின்னர் கொரோனா தொற்றினால் 2022 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமாகக் குறைந்தது.

2024 ஆம் ஆண்டில் இரண்டு சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுவதுடன் இந்த ஆண்டு இரண்டு சதவீத வளர்ச்சியை எட்டினாலும் 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையை அடைவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகும்.

எனினும் 2027 அல்லது அதற்கு முன்னதாக அந்த இலக்கை அடைய வேண்டும் என்பது தங்களது எதிர்பார்ப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button