Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு : ரணில் விக்ரமசிங்க கோரிக்கை

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அதிபரின் கோரிக்கைக்கு இணங்க, தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையின் ஊடாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்காலத்தில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஊதிய நிர்ணயக் குழுவும், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவும் கூடி, சம்பந்தப்பட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள், சம்பந்தப்பட்ட விடயங்களில் உடன்பாட்டுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button