Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

சஜித்தை ஆதரித்த பின்னரும் ரணிலுடன் கைகோர்த்த பிரதான கட்சியின் ஆதரவாளர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செய்னுல் அதீன் எஹியா உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத்தின் பொதுப் பிரதிநிதிகள் பலரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் 11 முன்னாள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன், நோர்வூட், அகரபத்தனை, மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய உள்ளுராட்சி மன்றங்களின் 11 முன்னாள் உறுப்பினர்களே இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.

முன்னதாக றிசாத் பதியுதீன், மற்றும் திகாம்பரம் உள்ளிட்ட கூட்டணியினர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முன்வந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த தரப்பின் முன்னாள் மற்றும் தற்போதைய இரண்டாம் மட்ட தலைவர்கள் ரணிலுக்கான ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button