Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஜனவரி முதல் அதிகரிக்கப்படவுள்ள 10 அரச துறை ஊழியர்களின் சம்பளம்

அடுத்த வருடம் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி அலுவலக உதவியாளர்கள், சாரதிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் மருந்தாளுனர்கள், செவிலியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் சம்பளங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய தரம் III அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 5450 ரூபாவினாலும், தரம் II அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 8,760 ரூபாவினாலும், தரம் I அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 10,950 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் தரம் III சாரதியின் சம்பளம் 6,960 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், தரம் II சாரதியின் சம்பளம் 9,990 ரூபாவினாலும், தரம் I சாரதியின் சம்பளம் 13,020 ரூபாவினாலும் சிறப்பு தர ஓட்டுநருக்கு 16,340 ரூபா சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளது.

தரம் III சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்/விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களுக்கு 8,340 ரூபாவும், தரம் II உதவியாளர்களுக்கு 11,690 ரூபாவும் தரம் I உதவியாளர்களுக்கு 15,685 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

முகாமைத்துவ உதவியாளரின் மாதச் சம்பளம் தரம் IIIக்கு 10,140 ரூபாவும், தரம் IIக்கு 13,490 ரூபாவும், தரம் Iக்கு 17,550 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தரம் III, II மற்றும் Iக்கு முறையே 12,710 ரூபா, 17,820 ரூபா, 25,150 ரூபா சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர்களின் தரம் III பிரிவினரின் சம்பளம் 12,885, ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், தரம் IIக்கு 17,945 ரூபாவும், தரம் Iக்கு 25,275 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.

கதிரியக்க நிபுணர்கள் மற்றும் மருந்தாளுனர்களின் தரம் IIIக்கு 13,280 ரூபாவும், தரம் IIக்கு 18,310 ரூபாவும், தரம் Iக்கு 25,720 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.

தரம் III, II மற்றும் I செவிலியர்களின் சம்பளம் முறையே 13,725, 18,835 மற்றும் 26,165 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

பாடசாலை அதிபர்களின் III, II, I தரங்களுக்கான சம்பளம் முறையே 23,425 ரூபா, 29,935 ரூபா மற்றும் 39,595 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஐந்து பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் 17,480 ரூபாவினாலும், பட்டதாரி ஆசிரியர்களின் சம்பளம் 19,055 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button