Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இலங்கையை சூழவுள்ள ஆழ்கடலில் பாரிய வெடிப்பு!

இலங்கையை சூழவுள்ள கடற்கரையில் காணப்படும் ஆமைகள் ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜா-எல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை இதுவரை 25 இறந்த ஆமைகள் மற்றும் இரண்டு உயிருள்ள ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து ஆமைகளின் ஓட்டின் மேற்புறத்தில் கடுமையாக விரிசல் ஏற்பட்டிருப்பதனை தீவிரமாக கவனித்து வருதாக குறிப்பிடப்படுகின்றது.

சில ஆமைகள் மூளை பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் ஏதேனும் வெடிமருந்துகளை பயன்படுத்தியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த ஆமைகளை நீதிமன்றில் கையளிக்கப்பட்ட பின்னர், இறப்புக்கான காரணத்தை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் 04 நிறுவனங்கள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அடுத்த சில நாட்களுக்குள் அவசர அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button