Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இலங்கை சொகுசுக் கப்பல் – ஆயிரக்கணக்கான பயணிகளுடன் முதல் சேவை

Passenger Ship - EMPRESS - MarineTraffic

சென்னை – இலங்கை இடையேயான பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எம்.வி. எம்பிரஸ் (MS Empress) எனும் கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பித்து 1600 பயணிகளுடன் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கப்பல் நிறுவனமான Cordelia Cruises உடன் ஏற்படுத்தப்பட்ட புதிய கூட்டிணைவின்படி, இந்த கப்பல் நேற்று (05) பிற்பகல் சென்னையில் இருந்து இலங்கைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்திய மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தக் கப்பல் சேவையை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்தக் கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய 3 துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் எம்.வி. எம்பிரஸ் ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 11 மாடிகளுடன் 796 அறைகளைக் கொண்டுள்ளது.

நவீன வசதிகள் நிறைந்த இந்தக் கப்பல் மூலம் முதல் 4 மாதங்களில் மட்டும் 80,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button