Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வெளிநாடொன்றில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பணியாளர்கள்!

ஜோர்தானில் பணிபுரியும் இலங்கையர்கள் மோசமான நிலையிலிருப்பதனால் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோர்தானில் சஹாபி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்களே தமது பிரச்சினைகள் குறித்து தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

“தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களிற்கு சம்பளம் வழங்கப்படாமையால் மோசமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளனர்.

அதன்படி அவர்களுக்கு கடந்த 18 மாதங்களாக தொழிற்சாலை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை.

இதனால் இலங்கையர்கள் தங்களுடைய தங்கும் விடுதிகளில் உணவு மற்றும் தண்ணீரின்றி தவிகின்றனர். சிலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமது நிலை குறித்து ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போதிலும், இது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் தமது பிரச்சினைகளை காணொளி மூலம் தமது அவல நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் தம்மை நாட்டுக்கு அழைத்து வருமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்” என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button