Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகள் குறைக்கப்படுமென அறிவிப்பு

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில வகை கொடுப்பனவுகள் குறைக்கப்பட உள்ளதாகவும், சில ரத்து செய்யப்பட உள்ளதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன், எதிர்வரும் 20ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சார்பில் கல்வி சுற்றுலாக்கள், பயிற்சிகள் மற்றும் கூட்டங்கள் போன்றவற்றுக்கு வெளிநாடு செல்லும்  தரப்பினருக்கு நாளாந்தம் வழங்கப்படும் 40 டொலர் கொடுப்பனவு 25 டொலர்களாக குறைக்கப்படுகின்றது.

இதுவரையில் 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு 15 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட உள்ளது.

நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்து மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கு 15 நாட்களுக்கு 75 டொலர் என வழங்கப்பட்ட கொடுப்பனவு தொகை இனி 10 நாட்களுக்கு 40 டொலர்கள் என குறைக்கப்பட உள்ளது.

மேலும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போது வழங்கப்படும் பொழுதுபோக்கு கொடுப்பனவு தொகையான 750 டொலர் கொடுப்பனவு ரத்து செய்யப்பட உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button