Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

மேற்கிந்திய தீவுகள் அணியை வௌ்ளையடிப்பு செய்த இலங்கை!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வௌ்ளைடிப்பு செய்துள்ளது இலங்கை அணி.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவி சமரி அத்தபத்து 91 ஓட்டங்களைப் பெற்றார்.

நீலக்ஷிகா சில்வா 63 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி, பதில் இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 34.5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

16 வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான தொடர் ஒன்றை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button