Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

நெதர்லாந்துடன் போராடி வென்றது இலங்கை அணி!

ஐசிசி உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை பங்கேற்ற முதலாவது போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது.

புலவாயோவில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஓவா்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் Dhananjaya de Silva அதிகபட்சமாக 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

நெதர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் Logan van Beek மற்றும் Bas de Leede ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது.

நெதர்லாந்து அணி சாா்பில் அதன் த​லைர் Scott Edwards ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இழங்கை அணி சாா்பில் Maheesh Theekshana 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button