Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதன்படி, இப்போட்டியில் ஆப்கானிஸ்தானின் வெற்றி இலக்கு 161 ஓட்டங்கள் ஆகும்.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்று முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்தது.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

தம்புள்ளை மைதானத்தில் ஆண்களுக்கான சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

இதேவேளை, தம்புள்ளை மைதானம் நவீனப்படுத்தப்பட்ட பின்னர் நடத்தப்படும் முதல் சர்வதேச போட்டியும் இதுவாகும்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button