Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Michael Bracewell மற்றும் Zakary Foulkes ஆகியோர் தலா 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக செயற்பட்ட நிலையில், Dunith Wellalage 03 விக்கெட்டுக்களையும், Nuwan Thushara, Wanindu Hasaranga, Matheesha Pathirana ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் Charith Asalanka ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றதுடன், Kusal Perera மற்றும் Kamindu Mendis ஆகியோர் தலா 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Zakary Foulkes 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய 02 போட்டிகள் கொண்ட இந்த T20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button