Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

நாளை (02) மற்றும் நாளை மறுதினமும் (03) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைவாக நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நாடு தழுவிய சேவைகள் மற்றும் இணையான திணைக்கள சேவைகளை சேர்ந்த சுமார் 18,000 நிறைவேற்று அதிகாரிகளுக்கு தாக்கம் செலுத்தியுள்ள தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து மாவட்ட மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாகவும், அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்த கூட்டங்களை புறக்கணித்துள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button