Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஆசிரியர் சேவைக்கு 7800 பேர் – வழங்கப்படவுள்ள புதிய நியமனங்கள்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் 7800 கல்லூரி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கபொத சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்தரக் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இன்று (18) இடம் பெற்ற நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் பங்குபற்றலுடன் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

“அடுத்த வருடம் பொது மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும்.

அத்துடன், விஞ்ஞானம், தொழிநுட்பம், மொழி போன்ற ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.” என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button