Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

தற்காலிக பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 10,355 தற்காலிக ஊழியர்களின் சேவையை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.

இந்த ஊழியர்களில் தற்காலிக ஒப்பந்த மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளடங்குவதாகவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கு அதிபர் மற்றும் பிரதமர் இணங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக, தற்காலிக பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட நிலையில் இந்த தற்காலிக பணியாளர்கள் ஆற்றிய பணியை கருத்தில் கொண்டு அவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 330 உள்ளூராட்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதில் 18 மாநகர சபைகள், 42 நகர சபைகள் மற்றும் 270 பிராந்திய சபைகள் உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button