Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

திறைசேரிக்கு வழங்கி வைக்கப்பட்ட 1.5 பில்லியன் ரூபா நிதி!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியது.

இதற்கான காசோலை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் நேற்று(26) அதிபர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

குறித்த காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

அதனையடுத்து, காசோலையை இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி ஸ்ரீயானி குலசிங்கவிடம், சாகல ரத்நாயக்க கையளித்துள்ளார்.

அதன்போது, நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடனும் சாகல ரத்நாயக்கவின் ஒத்துழைப்புடனும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், அதன் பயனை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதன்போது தெரிவித்தார்.

மேலும், லிட்ரோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 03 பில்லியன் ரூபாவை இலாபத் தொகையாக திறைசேரிக்கு அனுப்பியுள்ளதாக முதித பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button