Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை புதிய தலைமைத்துவ சபையின் ஊடாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சபை முடிவெடுப்பதற்கும், கட்சியின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும் பொறுப்பாகும், ருவான் விஜயவர்தன, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், சாகல ரத்நாயக்க, ஹரீன் பெர்னாண்டோ, நவீன் திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கட்சி விவகாரங்களில் முழுநேரமாக ஈடுபடக்கூடிய மற்றும் தேர்தலில் போட்டியிடாத ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.அடுத்த வாரம் நியமனம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அக்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலைமையின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபைக்கு பல பொறுப்புகள் மற்றும் கடமைகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், அடுத்த வருடம் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் அதற்குத் தேவையான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button