Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாகும் கட்டுப்பாடு

நாட்டில் இனிமேல் காவல்துறை உத்தியோகத்தர்கள் இல்லாமல் குத்தகை வாகனங்களை குத்தகைக்கு நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முடியாதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான சுற்றறிக்கை 4 நாட்களில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அனுப்பப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குத்தகை வாகனங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி, குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தினர் காவல்துறை தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு மௌனப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க பொத்துப்பிட்டிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் இல்லாத குத்தகை வாகனங்களை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்க மாட்டோம் எனவும் காவல்துறையினர் உறுதியளித்ததாகவும் அவர் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button