Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

அடையாள அட்டைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் போது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டை தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று நடத்திய (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “செல்லுபடியான தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை. அதனுடன், ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கிய அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படும்.

இவை எதுவும் இல்லாதவர்கள், தங்கள் கிராம அலுவலருடன் தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று, தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேவேளை, இம்முறை மாற்றுத்திறனாளி சமூகத்தினருக்கான தற்காலிக அடையாள அட்டையை வழங்கியுள்ளோம்” என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button