Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் (WhatsApp) புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் மெட்டா நிறுவனம் விரைவில் AI மூலம் வாட்ஸ்அப்பில் ஒரு பாரிய புதுப்பிப்பைக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிபபடையில், வாட்ஸ்அப்பானது Meta AI Voice Chat உடன் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயனர்கள் குரல் மூலம் மெட்டா AI இடம் கேள்விகளைக் கேட்டால் அது உரை (Text) வடிவில் பதில்களை வழங்குவதாகவும் வாட்ஸ்அப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த செயலியை எளிதாக அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வாட்ஸ்அப் விரைவில் AR video calling, background edit, AI studio, user names, double tap to react ஆகிய அம்சங்களும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், AR (Augmented Reality) காணொளி அழைப்பு (video call) அம்சம் விரைவில் அறிமுகமாவுள்ளதோடு இந்த அம்சம் பயனர்கள் காணொளி அழைப்புகளைச் செய்யும் போது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அம்சத்தின் உதவியுடன் காணொளியின் பின்னணியை மாற்றம் செய்ய முடியுமெனவும் இனி தொலைபேசி எண்ணுடன் வேலை செய்யாமல் பயனர் பெயர்களுடன் வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கும் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button