Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

கனடாவின்(canada) – கியூபக் மாகாணத்தில் தட்டம்மை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான அறிவுறுத்தலை அந்நாட்டு மாகாண சுகாதார அலுவலகம் வழங்கியுள்ளது.

அந்தவகையில், தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் இதுவரையில் இந்த ஆண்டில் 11 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கியூபெக் மாகாணத்தின் நொவெல், மொன்றியால் மற்றும் மொன்றிஜி போன்ற பகுதிகளில் அதிக அளவில் தட்டம்மை நோயாளர்கள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.

நோய் பரவுகை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த நோய்த் தொற்றுக்கு பலர் இலக்காகி இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நோய் தொற்று உள்ளவர்களுடன் ஒரே அறையில் இருப்பதன் மூலம் இந்த நோய் பரவக்கூடிய இது என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நோய் தொற்று பரவுகை தொடர்பில் கியூபெக் மாகாண இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், நோய் தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகப்படுபவர்கள் தனித்திருப்பதன் மூலம் நோய் பரவுகையை வரையறுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சளி, இருமல். சிவந்த கண்கள் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் சற்று அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்குமாறும் முக கவசம் அணிவது பொருத்தமானது எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button