News

வளமான நாடாக மாறப்போகும் இலங்கை – 25 வருட திட்டம்

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கான 25 வருட திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் மட்டுமே அதனை அடைய முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (19) நடைபெற்ற 32ஆவது இன்டரெக்ட் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வளமான நாடாக மாறப்போகும் இலங்கை - 25 வருட திட்டம் | Prosperous Sri Lanka 25 Year Plan

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது.

றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி. கடந்த ஜூலை மாதம் எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடனே நாட்டைப் பொறுப்பேற்றேன்.

பல போட்டிகளில் தோல்வியடைந்த றோயல் அணியைப் போன்ற நிலையே எமது நாட்டுக்கும் இருந்தது. நாட்டை மீட்டெடுக்க முடியாது என பலரும் நினைத்தனர்.

ஆனால் கடந்த 7 மாதங்களில் அந்த நிலையை மாற்றி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தனது அணியினரால் முடிந்தது.

இலங்கை இனியும் வங்குரோத்து நாடாக இல்லை. அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அனைவரும் காண முடியும்.

பிராந்தியத்தில் மிகவும் வளமான நாடாக இலங்கையை மாற்ற, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினால் மட்டும் போதாது. அதற்கு பொருளாதாரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button